வெஜ் பிரைட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் வைக்கவும். கேரட் பீன்ஸ் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்த காய்கறியில் கொதித்த தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வைக்கவும். அதன் பின்பு வடிகட்டவும்.
- 3
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வானலியில் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வதங்கிய பின்பு வடிகட்டிய காய்கறியுடன் உப்பு சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்.
- 4
கொஞ்சம் வதங்கியதும் அதில் சோயா சாஸ் சேர்த்த உடன் வடிகட்டிய சாதத்தை சேர்க்கவும்.
- 5
வடிகட்டிய சாதத்துடன் வினிகர்,மிளகுத்தூள்,மல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
இப்போது சுவையான வெஜ் ப்ரைட் ரைஸ் தயார். சூடாக பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16718626















கமெண்ட்