பாஸ்தா(pasta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு உப்பு 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேகவிடவும் 8_10 நிமிடங்கள் வரை வேகவிடவும் கிள்ளி பார்த்தால் ரப்பர் மாதிரி இல்லாம கட் ஆக வேண்டும் இதுவே பதம் குழைய விட கூடாது பின் வடிகட்டி குளிர்ந்த நீர் ஊற்றி அலசி கொள்ளவும் பின் ஒரு தாம்பாளத்தில் போட்டு சுற்றிலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிரட்டி விடவும்
- 2
வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் மல்லித் தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 3
பின் பொடியாக நறுக்கிய பீன்ஸ் பட்டாணி சேர்த்து வதக்கவும்
- 4
பின் காய்கறிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும் பின் தக்காளி கெட்சப் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்
- 5
பின் எல்லாம் சேர்ந்து ஒரு நிமிடம் வரை நன்கு வதக்கவும் பின் வேகவைத்த பாஸ்தா சேர்த்து துருவிய கேரட் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
இறுதியாக எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கிய பின் பாஸ்தா தூளை பரவலாக தூவி இறக்கவும்
- 7
சுவையான ஆரோக்கியமான மசாலா பாஸ்தா ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
























கமெண்ட்