திணை உப்புமா(thinai upma recipe in tamil)
சிறுதானிய உணவு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மீடியம் அளவுடம்ளர் அதாவது 200 கிராம் அளவு திணை எடுத்து லேசாக சூடு ஏற வறுத்துக்கொள்ளவும். பிறகு அதில் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயம் பொடியாக அரிந்து கொள்ளவும் இரண்டு பச்சை மிளகாய் அரிந்து கொள்ளவும். ஒரு தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சோம்பு ஒரு பட்டை இவற்றை சேர்த்து சிவக்க விடவும் பிறகு பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு வதங்கிய பொருட்களில் 3.5 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். பிறகு ஊற வைத்த திணையின் தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து நன்கு கலந்து விட்டு குக்கரை மூடவும். ஒரு சவுண்ட் அதிக ஃப்லேமில் விடவும். மீதி இரண்டு சவுண்ட் மிதமான ஃப்ளேமில் விடவும். பிறகு ஸ்டவ்வை ஆப் செய்யவும். ஆவி அடங்கபின் திறந்து அதில் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து விடவும். சூடாக இருக்கும் பொழுது சட்னி அல்லது தயிர் தொட்டு சாப்பிடலாம்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes








கமெண்ட் (2)