தைத்திருநாள் பானை பொங்கல்/ சர்க்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)

எப்போதும் செய்யும் சர்க்கரை பொங்கல் தான் வானில் செய்யும் போது அதுவும் தைத்திரு நாளுக்காக செய்யும்போது மிகவும் சந்தோஷமாகவும் சர்க்கரைப் பொங்கல் சுவையாகவும் இருக்கும்.
தைத்திருநாள் பானை பொங்கல்/ சர்க்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)
எப்போதும் செய்யும் சர்க்கரை பொங்கல் தான் வானில் செய்யும் போது அதுவும் தைத்திரு நாளுக்காக செய்யும்போது மிகவும் சந்தோஷமாகவும் சர்க்கரைப் பொங்கல் சுவையாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஏற்கனவே என் ரெசிபி பால் பொங்கல் குறிப்பில் கூறியபடி புது பானையை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளவும். பானையில் முதலில் பாலை காய வைக்கவும். ஊறிய பச்சரிசியை தண்ணீர் கழுவி ஊற்றாமல் அப்படியே களைந்து காய்ந்த பாலில் போடவும். தண்ணீர் சுண்ட சுண்ட கழு நீர் சேர்த்து வேகவிடவும். பால் மற்றும் கழுநீரில் அரிசி நன்கு வெந்தவுடன் பொடித்த வெள்ளம் ஒண்ணேகால் கப் சேர்த்து நன்கு கிளறவும்.
- 2
பிறகு ஒரு சிறிய துண்டு சுட்ட சுக்கை நன்றாக அம்மியில் நசுக்கி நார் எடுத்துக் கொள்ளவும். அந்த பவுடரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு நாலு ஏலக்காயை அம்மியில் வைத்து நன்றாக நசுக்கி கொள்ளவும். கால் ஸ்பூன் அளவிற்கு ஜாதிக்காயை நுணுக்கி எடுத்துக் கொள்ளவும். இவை மூன்றையும் சர்க்கரைப் பொங்கலில் சேர்ந்து கிளரி விடவும். உங்களுக்கு தேவை என்றால் மிகவும் கொஞ்சமாக பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளலாம்.
- 3
- 4
பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரிப்பருப்பை நன்கு வறுத்துக் கொள்ளவும். சர்க்கரைப் பொங்கலில் சேர்த்து கலந்து விடவும். மீதி நெய்யை தங்களுக்கு தேவையான அளவுபொங்கலில் சேர்த்து நன்கு கலந்து விடவும். பானைக்கு இப்போது திருநீர் பட்டை வைத்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து பூஜைக்கு எடுத்துக் கொள்ளவும். புது பானையில் செய்த சர்க்கரை பொங்கல் பூஜைக்கு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes









கமெண்ட் (2)