கருப்பு உளுந்தங்களி

பெண்கள் உடம்புக்கு ஆரோக்கியமான உணவு வகைகளில் இது மிகவும் முக்கியமானதாகும் எலும்புகளை வலுப்படுத்தும் கருப்பு உளுந்து சேர்த்து செய்வதனால் ஆரோக்கியம் நிறைந்த உணவாகும் மிகவும் எளிமையான வகையில் செய்துவிடலாம் #WA
கருப்பு உளுந்தங்களி
பெண்கள் உடம்புக்கு ஆரோக்கியமான உணவு வகைகளில் இது மிகவும் முக்கியமானதாகும் எலும்புகளை வலுப்படுத்தும் கருப்பு உளுந்து சேர்த்து செய்வதனால் ஆரோக்கியம் நிறைந்த உணவாகும் மிகவும் எளிமையான வகையில் செய்துவிடலாம் #WA
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை சுத்தம் செய்து தனியே வைத்துக் கொள்ளவும் தொலி உளுத்தம் பருப்பை மிதமான சூட்டில் வாசனை வரும் வரை நன்கு வறுக்கவும்
- 2
வறுத்த தொழில் உளுத்தம் பருப்பை அரிசி உடன் சேர்த்து ஆறு எதும் மாவு அரைக்கும் மிஷினில் கொடுத்து நைசாக அரைக்கவும்
- 3
ஒரு அடி கனமான பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு தூள் செய்த வெல்லத்தை ருசிக்கு ஏற்ப சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 4
இன்னொரு பாத்திரத்தில் தேவையான அளவு மாவு எடுத்து கட்டிகள் இல்லாமல் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்
- 5
வெல்லம் கரைந்ததும் வடிகட்டி திரும்பவும் கொதிக்க விடவும் அதில் கரைத்து வைத்த மாவை சிறிது சிறிதாக ஊற்றி அடிப்பிடிக்காமல் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்
- 6
மாவு நன்கு வெந்து கட்டியாக ஆனதும் இறக்கி கையில் அல்லது கிண்ணத்தில் நல்லெண்ணெய் தடவி உருண்டை செய்து நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறவும் மிகவும் சத்து நிறைந்த ஆரோக்கியம் மிகுந்த கருப்பு உளுந்தம் களி தயார் வாரம் இரண்டு முறை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு இது
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட் (3)