*வாட்டர் மெலோன் ரசம்*

தர்பூசணி சீசன் இது. அதனால் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் பலவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். நான் இதை பயன்படுத்தி ரசம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. சூப்பாக செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுடசுட குடிக்கலாம்.
*வாட்டர் மெலோன் ரசம்*
தர்பூசணி சீசன் இது. அதனால் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் பலவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். நான் இதை பயன்படுத்தி ரசம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. சூப்பாக செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுடசுட குடிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
தர்பூசணியை சுத்தம் செய்து, அதன் தோலை நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- 3
சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பௌலில் வடிகட்டிக் கொள்ளவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில், ம.தூள், உப்பு, போட்டு, குழைய வேக வைத்து பருப்புத் தண்ணியை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
புளியை, வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து, பிறகு வடிகட்டி, அதனுடன், ஒரு பௌலில், ம.தூள், ரசப்பொடி, மிளகு, சீரகப் பொடி, உப்பு, சேர்த்து நன்கு கலந்துக் கொண்டு, குக்கரில், புளி வாசனை போக கொதிக்க விடவும்.
- 6
கொதித்ததும், பருப்பு தண்ணீரை ஊற்றவும்.
- 7
அடுத்து தர்பூசணி சாறை விட்டு, கொதித்து ஒரு பொங்கு வந்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 8
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில், 1ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு பொரிந்ததும், மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, தாளித்துக் கொட்டவும்.
- 9
பிறகு, எலுமிச்சை சாறை ஊற்றி நன்கு கலந்துக் கொள்ளவும்.
- 10
பிறகு பௌலுக்கு மாற்றவும்.
- 11
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*வாட்டர் மெலோன் ரசம்*தயார். இதனை சூப்பாகவும் சுடசுட குடிக்கலாம். செய்து பார்த்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்ஜாய் செய்யவும்.
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட் (2)