சிக்கன் கோலா உருண்டை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டி, உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு சேர்த்து வேக வைத்து ஆற வைக்கவும்.பொட்டுக்கடலையை பொடித்து கொள்ளவும்.
- 2
வேக வைத்த சிக்கனை மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். அடுத்து மிக்ஸியில் வெங்காயம்,பச்சை மிளகாய்,புதினா, மல்லி இலையையும் பர பரவென்று சுற்றி எடுக்கவும்.அரைத்த சிக்கன், பொட்டுக்கடலை மாவு, முட்டை, அரைத்த வெங்காயம்,மல்லி,புதினா,பச்சை மிளகாய் விழுது,மிளகு,சீரக,சோம்பு,கரம் மசாலா தூள்களை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து வைக்கவும்.
- 3
அவற்றை சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்.கடாயில் தேவைக்கு எண்ணெய் விட்டு நன்கு காயவும் கோலா உருண்டைகளை மிதமான தீயில் சிவற பொரித்து எடுக்கவும்.பொரிக்கும் பொழுது எண்ணெய் அவ்வளவாக குடிக்காது.
- 4
சுவையான சிக்கன்கோலா உருண்டை ரெடி. இதனை அப்படியே பண்டம் போல் சாப்பிடலாம், சைட் டிஷ் ஆகவும் பரிமாறலாம்.சிறு குழந்தைகளும் போட்டி போட்டி கொண்டு சாப்பிடுவார்கள்.கோலா உருண்டை உள்ளே சாஃப்டாக வெளியே கிரிஸ்பாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட் (2)