புட்டு கடலைகறி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
புட்டு மாவுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெதுவெதுப்பான நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்.புட்டுக் குழலில் சிறிதளவு மாவு, தேங்காய்த் துருவல் என மாற்றி மாற்றி வைத்து நிரப்பவும். இதை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
- 2
கடலை கறி
1.வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- 3
அதே வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
பின் அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- 5
.அதனுடன் கறிவேப்பிலை, வேகவைத்த கடலை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
- 6
6.கொத்தமல்லித்தழை தூவி புட்டுடன் பரிமாறவும்
- 7
புட்டு,ஆப்பம்,சப்பாத்தி,பூரி இவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
கமெண்ட் (3)