(Leftover) அடைமாவு கேரட் பணியாரம்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#leftover

நேற்று அடை செய்ததில் மாவு மீதம் இருந்தது. அந்த அடை மாவோடு கேரட் துருவல் சேர்த்து பணியாரம் செய்தேன். வெளியே மிகவும் கிரிஸ்பியாக உள்ளே மிகவும் மிருதுவாக இருந்தது. சுவையும் அபாரம்.

(Leftover) அடைமாவு கேரட் பணியாரம்

#leftover

நேற்று அடை செய்ததில் மாவு மீதம் இருந்தது. அந்த அடை மாவோடு கேரட் துருவல் சேர்த்து பணியாரம் செய்தேன். வெளியே மிகவும் கிரிஸ்பியாக உள்ளே மிகவும் மிருதுவாக இருந்தது. சுவையும் அபாரம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 11/2 கப் அடைமாவு
  2. 1/2 கப் கேரட் துருவல்
  3. 1/2 தேக்கரண்டி உப்பு
  4. 1/2 தேக்கரண்டி மிளகாய்ப் பொடி
  5. தேவையானஅளவு நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடைமாவில் கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்துத் தாளித்திருப்பதால் அந்த மாவில் வேறெதுவும் சேர்க்காமல் அப்படியே எடுத்துக் கொண்டேன்.

  2. 2

    துருவிய கேரட், உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்துக் கலந்து கொண்டேன்.

  3. 3

    பணியாரக்கல்லை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றினேன்.

  4. 4

    மூடி வைத்து வேக வைத்தேன். ஒரு பக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேக வைத்தேன்.

  5. 5

    இருபுறமும் வெந்ததும் பணியாரத்தை எடுத்து சாம்பாரோடு பரிமாறினேன். வெளியே மிகவும் கிரிஸ்பியாகவும் உள்ளே மிகவும் மிருதுவாகவும் நல்ல சுவையாகவும் இருப்பதாக வீட்டில் அனைவரும் விரும்பி உண்டார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes