கருப்பு உளுந்து இட்லி

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

# இட்லி
கறுப்பு உளுத்தம்பருப்பில் பெரும்பாலான பருப்பு வகைகளை விட அதிக புரத சத்து கொண்டுள்ளது. இது நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்தது. பெண்களின் இடுப்பு எலும்பு வலுவூட்டும் .ஆகவே பூப்படையும் பொழுதும் கர்ப்ப காலத்திலும் இதில் உழுத்தங்களி செய்து கொடுப்பார். நம்ம உடலுக்கு புத்துணர்ச்சி எலும்புக்கு வலு, ஆரோக்கியமான இதயத்திற்கும் , சுலபமான செரிமானத்திற்கும் என அனைத்து விதமான ஆரோக்கியத்துக்கும் இந்த கருப்பு வந்து மிகவும் உபயோகப்படுகிறது . இதனை இட்லி பொடி உளுந்து களி அல்லது இதுபோல் இட்லி என செய்து சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/2 கப் கருப்பு உளுத்தம்பருப்பு
  2. 2 கப் இட்லி புழுங்கல் அரிசி
  3. 1டேபிள்ஸ்பூன் வெந்தயம்
  4. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    இட்லி அரிசியை எப்பொழுதும் போல் நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். கருப்பு உளுந்து மற்றும் வெந்தயத்தை ரெடியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். (கருப்பு உளுந்தை ஊறவைத்து அரைத்தால் அதன் தோல் அரை படாது.)

  2. 2

    கருப்பு உளுந்து மற்றும் வெந்தயத்தை உடனடியாக தண்ணீர் வடித்து தண்ணீர் சேர்க்காமல் கிரைண்டரில் அரைக்கவும். அரைக்கும்போது சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்கவும்.உளுந்து முக்கால் பதம் அரைபட்டதும், ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    எப்பொழுதும்போல் இந்த மாவை புளிக்க வைத்து இட்லி செய்யவும். வெங்காய சட்னி இதற்கு மிகவும் சிறந்த காம்பினேஷன்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes