முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி

#mom
முருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
#mom
முருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி கால் கப் உளுந்து கால் கப் முருங்கைக்கீரை ஒரு கப் தேங்காய்ப்பால் வெந்தயம் சீரகம் மிளகு வரமிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்
- 2
அரிசி கால் கப் உளுந்து கால் கப் ஆகியவற்றை கழுவி 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 3
முருங்கைக் கீரையை தண்ணீரில் அலசி ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். கடாயில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்
- 4
பின் அதில் சீரகம் வரமிளகாய் மிளகு வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் பின் அதில் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 5
பின் அதை முருங்கைக்கீரை சேர்த்து நான்கில் இருந்து ஐந்து நிமிடம் வரை வதக்கவும். பிறகு அதில் ஊறவைத்த அரிசி மற்றும் கருப்பு உளுந்தை சேர்க்கவும். 3 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்
- 6
தேவையான அளவு உப்பு சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும். அதில் ஒரு கப் தேங்காய்ப் பாலை சேர்த்து கிளறவும்.
- 7
தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.சூடாக பரிமாறவும் மிகவும் சுவையான ஆரோக்கியமான முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#mom குழந்தை பெற்ற பெண்கள் உளுந்துகளி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.இடுப்பு பகுதிக்கு பலம் சேர்க்கும் Nithyavijay -
உளுந்தங்களி
#india2020 #mom கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும். Viji Prem -
அரிசி உலை கஞ்சி
#momஇந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதத்தில் இருந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது. Shyamala Senthil -
கருப்பு உளுந்து லட்டு/உருண்டை
#Kids1 #deepavali எலும்புகளுக்கு வலுகொடுக்கும் ஒரு வகை உணவு உளுந்துவகைகள்.இனிப்பு கலந்து செய்ய போகிறோம். Shalini Prabu -
கருப்பு உளுந்து இட்லி
# இட்லி கறுப்பு உளுத்தம்பருப்பில் பெரும்பாலான பருப்பு வகைகளை விட அதிக புரத சத்து கொண்டுள்ளது. இது நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்தது. பெண்களின் இடுப்பு எலும்பு வலுவூட்டும் .ஆகவே பூப்படையும் பொழுதும் கர்ப்ப காலத்திலும் இதில் உழுத்தங்களி செய்து கொடுப்பார். நம்ம உடலுக்கு புத்துணர்ச்சி எலும்புக்கு வலு, ஆரோக்கியமான இதயத்திற்கும் , சுலபமான செரிமானத்திற்கும் என அனைத்து விதமான ஆரோக்கியத்துக்கும் இந்த கருப்பு வந்து மிகவும் உபயோகப்படுகிறது . இதனை இட்லி பொடி உளுந்து களி அல்லது இதுபோல் இட்லி என செய்து சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்கள். BhuviKannan @ BK Vlogs -
கருப்பு உளுந்து பாயசம்🍵
#nutrient1 protein + calcium + iron =100% healthyஉளுந்தில் இருக்கும் புரத சத்தும், பாலில் இருக்கும் கால்சியம் , வெள்ளத்தில் இருக்கும் இரும்பு சத்தும் சேர்த்து செய்த ஆரோக்கியமான பாயசம். வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
கருப்பு உளுந்து களி
#queen1வயதுக்கு வந்த பெண்களுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கும்கொடுக்க வேண்டிய உணவு. Gowri's kitchen -
-
-
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#ga4#week16#spinachsoupவாரத்திற்கு ஒரு முறையாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஒரு சூப் Vijayalakshmi Velayutham -
-
-
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
-
-
-
கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு. Santhi Chowthri -
கருப்பு உளுந்து சாதம் (Karuppu ulunthu satham recipe in tamil)
#Jan1உளுந்தில் கால்சியம் அதிகமாக உள்ளது இது முழங்கால் வலி ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளம் ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நாம் அடிக்கடி ஒழுங்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் Sangaraeswari Sangaran -
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
கருப்பு உளுந்து சுண்டல் (Karuppu ulunthu sundal Recipe in Tamil)
#virudhaisamayalகருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. Lavanya Venkat -
-
சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை
#everyday1கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும் Vijayalakshmi Velayutham -
கருப்பு உளுந்து தோசை(karuppu ulunthu dosai recipe in tamil)
#welcome பெண்களுக்கு மிக நல்லது கருப்பு உளுந்து, தோளில் தான் பாக்டீரிய, கால்சியமும், பாஸ்பரஸும் அதிக அளவு உள்ளது. ஆனால் கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் இட்லி, தோசை, வடையின் நிறம் மாறிவிடுகிறது என்பதால் பலரும் வெள்ளை உளுந்தை நாடுகிறார்கள். வாரம் ஒருமுறையாவது கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Anus Cooking -
உளுந்து மாவு கஞ்சி
உளுந்த மாவு கஞ்சியை இன்று செய்து பார்த்தேன். என் குழந்தைகள் மிகவும் விரும்பி குடித்தனர். Manju Jaiganesh -
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
-
உளுந்தம் பருப்பு கஞ்சி(Uluntham paruppu kanjii) #mom
1. உளுந்து இரும்புச்சத்து நிறைந்தது.2. எலும்புகளை பலப்படுத்தும்.3. இந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் 7 மாதத்திற்கு பிறகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.4. இதனால் இடுப்பு எலும்புகள் பலப்படும்.5. இதை பிரசவத்திற்குப் பிறகும் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும். Nithya Ramesh -
அரைச்சு விட்ட முருங்கைக்கீரை குழம்பு (Araichu vitta murunkai keerai kulambu recipe in tamil)
#mom முருங்கைக்கீரை கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் அதிகரிக்க உதவும் கர்ப காலத்திற்குப் பிறகு பால் சுரப்பது அதிகரிக்கும். Nithyavijay -
More Recipes
கமெண்ட் (2)