வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுண்டைக்காயை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
- 2
பின் அதே வாணலியை வைத்து, சற்று அதிகமான அளவு நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
- 3
பின்னர் அதில் வெங்காயம்,பூண்டு சேர்த்து சிவக்கும் வரை வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 4
பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் புளி தண்ணீரை விட்டு, சிறிது உப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 5
குழம்பு சற்று கெட்டிபட்டு, எண்ணெய் பிரிந்தபின் அதில் பொரித்து வைத்துள்ள சுண்டைக்காயை போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி, அதில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி மூடி வைக்கவும்.1 மணி நேரம் கழித்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12880452



கமெண்ட்