கொத்தமல்லி ரசம்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. பேஸ்ட் பொருட்கள்:
  2. 1 மேஜை கரண்டி நல்லெண்ணெய்
  3. 1 மேஜை கரண்டி உளுந்து
  4. 1 மேஜை கரண்டி கொத்தமல்லி விதை
  5. 4உலர்ந்த சிகப்பு மிளகாய்’
  6. ¼ தேக்கரண்டி வெந்தயம்
  7. 1 தேக்கரண்டி சீரகம்
  8. 1 தேக்கரண்டி மிளகு
  9. 1 கப் கொத்தமல்லி தழை
  10. 1 மேஜை கரண்டி இஞ்சி, நறுக்கியது
  11. 3 பல் பூண்டு
  12. 1 தேக்கரண்டி புளி பேஸ்ட்
  13. மற்ற ரச பொருட்கள்
  14. சிட்டிகை பெருங்காயம் (Hing)
  15. 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  16. ¼ கப் கறிவேப்பிலை
  17. 1 தேக்கரண்டி கடுகு
  18. ½ கப் தக்காளி, நறுக்கியது
  19. ¼ கப் வேகவைத்த துவரம் பருப்பு
  20. 1 தேக்கரண்டி ரச பொடி
  21. ¼ கப் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
  22. தேவையானஉப்பு
  23. பிரிவு ரசம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

  2. 2

    தேவையானப் பொருட்களை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

  3. 3

    மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலி வைத்து உளுந்து சிவக்க வறுக்க. கொத்தமல்லி விதை, மிளகாய்’, வெந்தயம், மிளகு. சீரகம் சேர்த்து வறுக்க. வறுத்த பொருட்களை 1 கப் நீரில் ஊறவைக்க
    மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலி வைத்து எண்ணை சூடு பண்ணி கொத்தமல்லி தழை, இஞ்சி, பூண்டு போட்டு வதக்க -4 நிமிடங்கள்.
    பிலென்டரில் ஊற வைத்த சாமான்களை அறைக்க. பின் வதக்கிய சாமான்களை சேர்த்து புளி பேஸ்ட் உடன் அறைக்க. மழ மழவென்று அறைக்க அவசியமில்லை, உப்பு சேர்க்க. பேஸ்ட் தயார்

  4. 4

    ரசம் செய்ய:
    ஒரு கிண்ணத்தில் துவரம் பருப்புடன் 2 கப் நீர் சேர்த்து பிரஷர் குக்கரில் குழைய வேக வைக்க. மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை சூடு பண்ணி, கடுகு, பெருங்காயம் தாளிக்க. கறிவேப்பிலை, தக்காளி, சேர்க்க.

  5. 5

    குக்கரில் வேகவைத்த துவரம் பருப்பு சேர்க்க. 5 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. பேஸ்ட், ரச பொடி சேர்க்க, கிளற. 4 கொதி வந்ததும் அடுப்பை அணைக்க. உப்பு சேர்க்க. கொத்தமல்லி தூவுக
    மணமான சுவையான சத்தான நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ரசம் தயார். பருகி ருசித்து பரிமாறுக.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes