வெண்பொங்கல்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Grand2

பண்டிகை என்றாலே காலையில தமிழ்நாட்டில அதிக அளவில் இட்லி மற்றும் வெண்பொங்கல் மெதுவடை அடுத்ததா பூரி கிழங்கு மசாலா மொறு மொறு தோசை இது எல்லாம் தவறாமல் இடம் பிடிக்கும் அதுல மிகவும் எளிய முறையில் அரைமணி நேரத்தில சுடச்சுட வெண்பொங்கல் கூட மெதுவடை செய்யலாம்

வெண்பொங்கல்

#Grand2

பண்டிகை என்றாலே காலையில தமிழ்நாட்டில அதிக அளவில் இட்லி மற்றும் வெண்பொங்கல் மெதுவடை அடுத்ததா பூரி கிழங்கு மசாலா மொறு மொறு தோசை இது எல்லாம் தவறாமல் இடம் பிடிக்கும் அதுல மிகவும் எளிய முறையில் அரைமணி நேரத்தில சுடச்சுட வெண்பொங்கல் கூட மெதுவடை செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. வெண்பொங்கல் செய்ய:
  2. 1_1/2 கப் பச்சரிசி
  3. 1 கப் பாசிப்பருப்பு
  4. 200 கிராம் நெய்
  5. 2 ஸ்பூன் சீரகம்
  6. 2 ஸ்பூன் குருமிளகு
  7. 1 கைப்பிடி அளவு முந்திரி
  8. 2 கொத்து கறிவேப்பிலை
  9. 1/8 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  10. 1_1/2 ஸ்பூன் உப்பு
  11. மெதுவடை:
  12. 200 கிராம் உளுந்து
  13. 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  14. 6 பச்சைமிளகாய்
  15. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  16. கறிவேப்பிலை சிறிது
  17. கொத்தமல்லி தழை சிறிது
  18. உப்பு தேவையான அளவு
  19. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வெண்பொங்கல் செய்ய: பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு ஐ கழுவி குக்கரில் போட்டு 10 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் 8 நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் வைத்து இறக்கவும் ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு முறை நன்றாக கிளறி விடவும்

  2. 2

    100 மில்லி நெய் விட்டு சூடானதும் குருமிளகு சேர்த்து வெடித்ததும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்

  3. 3

    பின் முந்திரி சேர்த்து வறுக்கவும் பாதி சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நன்கு மொறுமொறுப்பாக சிவந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் பொங்கல் உடன் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி ஒரு முறை கிளறி விடவும்

  6. 6

    சுவையான ஆரோக்கியமான பொங்கல் ரெடி

  7. 7

    மெதுவடை செய்ய: உளுந்தை இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து பஞ்சு போல அரைத்து எடுக்கவும் பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் கைகளில் தண்ணீர் தொட்டு கொண்டு உருட்டி நடுவில் ஒட்டை போட்டு சூடான எண்ணெயில் போடவும்

  8. 8

    இரண்டு புறமும் வேகவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  9. 9

    நெய் மிதங்க வெண்பொங்கல் மற்றும் மெதுவடை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes