எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 நபருக்கு
  1. 1/4 கிலோ பிஞ்சு கத்திரிக்காய்
  2. 30 சின்ன வெங்காயம்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 3 தக்காளி விழுது
  5. 1/2 டம்ளர் புளித்தண்ணீர்
  6. வறுத்து அரைப்பதற்கு
  7. 1/2 ஸ்பூன் வெந்தயம்
  8. 3 ஸ்பூன் கொத்தமல்லி
  9. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  10. 3 ஸ்பூன் நிலக்கடலை
  11. 1 கைப்பிடி தேங்காய்துருவல்
  12. 5 வர மிளகாய்
  13. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  16. தாளிக்க
  17. 1/4 டம்ளர் நல்லெண்ணெய்
  18. கடுகு,கருவேப்பிலை
  19. 2 வர மிளகாய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் வெந்தயம் கொத்தமல்லி கடலைப்பருப்பு நிலக்கடலை தேங்காய் துருவல் இவற்றை வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வைக்கவும். மூன்று தக்காளியை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

  2. 2

    வாணலியில் கால் டம்ளர் நல்லெண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை நன்கு வதக்கி எடுத்து தனியாக வைக்கவும். அதே எண்ணெயில் கடுகு வரமிளகாய் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    அதோடு தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரைத்த கொத்தமல்லி விழுதை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பிறகு புளித்தண்ணீர் உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  5. 5

    குழம்பிற்கு தேவையான தண்ணீர் ஊற்றி வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

  6. 6

    அடுப்பிலிருந்து இறக்கிய பின் பெருங்காயத்தூள் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes