கத்திரிக்காய் புளி குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)

Udayabanu Arumugam
Udayabanu Arumugam @cook_26992295

மீன் குழம்புக்கு நிகரான சுவையுடைய புளிக்குழம்பு. இரண்டு நாட்களானாலும் கெடாது சுவை இன்னும் அதிகமாகும்

#ilovecooking
#skvweek2

கத்திரிக்காய் புளி குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)

மீன் குழம்புக்கு நிகரான சுவையுடைய புளிக்குழம்பு. இரண்டு நாட்களானாலும் கெடாது சுவை இன்னும் அதிகமாகும்

#ilovecooking
#skvweek2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  1. கத்திரிக்காய் - 5-6
  2. சிறியவெங்காயம் - 10
  3. பூண்டு - 5 பல்
  4. 1 கப்புளி தண்ணீர்
  5. 1/2 கப்துருவிய தேங்காய்
  6. 1 ஸ்பூன்சோம்பு
  7. 1 ஸ்பூன்கடுகு
  8. 1 ஸ்பூன்வெந்தயம்
  9. 1/2 கப்நல்லெண்ணெய்
  10. 1 ஸ்பூன்மல்லி தூள்
  11. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  12. உப்பு - தேவையான அளவு
  13. அரைப்பதற்கு
  14. பெரிய வெங்காயம் - 1
  15. தக்காளி - 1
  16. இஞ்சி - 1 இஞ்ச்
  17. பூண்டு - 5 பல்
  18. 1 ஸ்பூன்வர கொத்துமல்லி
  19. 1 ஸ்பூன்சீரகம்
  20. 1 ஸ்பூன்மிளகு
  21. வர மிளகாய் - 2
  22. 1 ஸ்பூன்மஞ்சள் தூள்
  23. கருவேப்பிலை - சிறிது

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி,அரைக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    சூடாறிய பின், வதக்கிய பொருட்களை நன்கு அரைத்து கொள்ளவும்

  3. 3

    கத்தரிக்காய் காம்பு நீக்கி விட்டு 3-4 கீறல்கள் போடவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது உப்பு, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து வணக்கி, கத்திறிகாய்களை சேர்க்கவும். மூடி வைத்து 7 நிமிடம் வேக விட்டு ஒரு தட்டில் மாற்றவும்

  5. 5

    அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து, சிறிய வெங்காயம், பூண்டு மற்றும் அரைத்த விழுது சேர்த்து வணக்கவும்

  6. 6

    கத்திறிகாய்களை சேர்த்து மாசலாவுடன் கலக்கவும். புளி தண்ணீர் சேர்த்து உப்பு, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்

  7. 7

    கத்திரிக்காய் நன்கு வெந்ததும், தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து கொதிக்க விடவும்.

  8. 8

    கடுகு, வெந்தயம் தாளித்து குழம்பில் கொட்டவும். சுவையான புளி குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Udayabanu Arumugam
Udayabanu Arumugam @cook_26992295
அன்று

Similar Recipes