முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்பு
அரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பேர்
  1. சமையல் எண்ணெய் - 2 ஸ்பூன்
  2. கடுகு - 1/2 டீஸ்பூன்
  3. வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
  4. சிறியவெங்காயம் - 15 பீஸ்
  5. கருவப்பிலை தேவையான அளவு
  6. பெரிய தக்காளி - 2
  7. முருங்கைக்காய் - 3
  8. குழம்பு மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. பூண்டு - 6 பற்கள்
  12. சீரகம் - 3/4 டீஸ்பூன்
  13. புளி கரைசல் ஒரு நெல்லிக்காய் அளவு
  14. அரை மூடி தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும், பின்னர் கடாய் நன்கு காய்ந்தவுடன்,கடாயில் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன்,
    1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து வனக்கவும்.

  2. 2

    கடுகும், வெந்தயமும் பொறிந்தவிடன் அதனுடன் கறிவேப்பிலையையும், நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.பின்பு அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும்.

  3. 3

    தக்காளியை நன்கு வெங்காயத்துடன் சேர்த்து மசிய வதக்கவும்,நன்கு வதங்கியவுடன் அதனுடன் வெட்டி வைத்துள்ள 3 முருங்கைக்காய், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்,தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    முருங்கைக்காய் வணக்கியவுடன், அதனுடன் கரைத்து வைத்துள்ள ஒரு நெல்லிக்காய் அளவு புளி தண்ணீரை ஊற்றவும்,பின்பு மூடி போட்டு முருங்கைக்காய், புளி தண்ணீருடன் நன்று கொதிக்க விடவும்.

  5. 5

    மூடி போட்டு முருங்கைக்காய் வனங்கி கொண்டிருக்கும் போது, 1/2 மூடி தேங்காய் துருவல், 6 பற்கள் பூண்டு, 3/4 டீஸ்பூன் சீரகம் இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

  6. 6

    அரைத்து வைத்திருக்கும் கலவையுடன் குழம்பு மிளகாய் பொடி சேர்த்து கலக்கவும்,கலக்கிய கலவையை கடாயில் வெந்து கொண்டிருக்கும் முருங்கைக்காய் உடன் ஊற்றி கலக்கவும்.

  7. 7

    கடாயில் ஊற்றிய கலவைகளை நன்கு கலந்து விட்டு பின் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.

  8. 8

    மூடி போட்டு நன்கு கொதித்த பிறகு சேர்த்த கலவைகளுடன், முருங்கைக்காய் நன்கு வெந்து விட்டதா என்று பார்த்து விட்டு மல்லி இலைகளை தூவி, மனம் வீசும் முருங்கைக்காய் பொரிச்சா குழம்பை அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.குழம்பு தயார்.

  9. 9

    பின்பு வீட்டில் உள்ள அனைவருக்கும் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள அற்புதமான மனம் வீசும் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு,மகிழ்ச்சியுடன் பரிமாறுங்கள்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
முருங்கை காய் பொரிச்ச குழம்பு சூப்பர் 👌👌👏👏👏

எழுதியவர்

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
அன்று

Similar Recipes