சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry

MuthulakshmiPrabu
MuthulakshmiPrabu @muthuprabu1416

#pms family

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த எல்லாவகை சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று காண்போம்.. வாருங்கள் மக்களே..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 நபர்
  1. சோயா- 50 கிராம்
  2. சீரகம்- 1/2 டீஸ்பூன்
  3. Sombu- 1/2 டீஸ்பூன்
  4. கருவேப்பிலை- சிறிது
  5. வெங்காயம்- 1 பெரியது
  6. தக்காளி- 1
  7. இஞ்சி பூண்டு விழுது- சிறிதளவு
  8. மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
  9. மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன்
  10. கரம் மசாலா- 1 டீஸ்பூன்
  11. மிளகுத் தூள்- 1 டீஸ்பூன்
  12. தேங்காயத் துருவல்- தேவையான அளவு (optional)
  13. எண்ணெய்- தேவையான அளவு
  14. தூள் உப்பு- சிறிதளவு
  15. வர மிளகாய்- 2
  16. மல்லி தூள்- 1 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சோயா மிளகு வறுவல் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    நன்கு கொதித்த தண்ணீரில் அரை மணி நேரம் சோயாவை ஊற வைத்துக் கொள்ளவும்.. அரை மணி நேரத்திற்குப் பின்பு சோயாவை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் என்னை ஊற்றி சீரகம் சோம்பு வர மிளகாய் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..

  5. 5

    பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்..

  6. 6

    தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்..அதனுடன் சோயாவை சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

  7. 7

    இறுதியாக தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவல், மிளகுத்தூள், சிறிது சமையல் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விடவும்..

  8. 8

    இப்பொழுது மிகவும் சுவையான காரசாரமான நாவில் எச்சில் ஊறவைக்கும் சோயா மிளகு வறுவல் ரெடி.. இவை அனைத்து வகையான சாதத்திற்கும் உண்டு மகிழலாம் 😊😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

Top Search in

எழுதியவர்

MuthulakshmiPrabu
MuthulakshmiPrabu @muthuprabu1416
அன்று

Similar Recipes