சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை உரித்து வைத்து கொள்ளவும். தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், மணத்தக்காளி வத்தல் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
புளியை ஊறவைத்து நன்றாக கரைத்து வடித்து வைத்து கொள்ளவும். வதங்கிய வெங்காயத்தில் புளி கரைசல், மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்
- 5
வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்
- 6
கமகமக்கும் மதுரை வத்தக்குழம்பு தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையான காம்பினேஷன்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15014023










கமெண்ட்