தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கப் வேர்க்கடலை
  2. 1மேஜை கரண்டி கடலெண்ணெய்
  3. 1தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  4. 1தேக்கரண்டி கடுகு
  5. 1தேக்கரண்டி வெந்தயம்
  6. ½ தேக்கரண்டி பெருங்காயப் பொடி
  7. ¼ தேக்கரண்டிகறிவேப்பிலை
  8. 4காரமான ஊசி மிளகாய், சின்ன சின்ன தாக நறுக்கியது
  9. 1கப் வெங்காயம், நறுக்கியது
  10. 3கப் தக்காளி துண்டுகள்
  11. 1/2 தேக்கரண்டி புளி பேஸ்ட் (ஆப்ஷனல்)
  12. பேஸ்ட் செய்ய:
  13. 1மேஜை கரண்டி உளுந்து
  14. 1மேஜை கரண்டி கடலை பருப்பு
  15. 1மேஜை கரண்டி கொத்தமல்லி விதை
  16. 1மேஜை கரண்டி மிளகு
  17. 1தேக்கரண்டி கசகசா
  18. 5 கார வர மிளகாய்
  19. ½ கப் தேங்காய் துண்டுகள்
  20. 2 அங்குலம் இஞ்சி, தோலுரித்தது
  21. 4 பூண்டு
  22. ½கப் தேங்காய் பால்
  23. தேவையான அளவு உப்பு
  24. ¼ கப் கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.

  3. 3

    ஒரு கிண்ணத்தில் நிலக்கடலையை 3 கப் நீர் சேர்த்து 3-4 மணி நேரம் ஊறவைக்க. பின் குக்கரில் வேகவைக்க. 50% வெந்தால் போதும்

    நிலக்கடலை குக்கரில் வெந்துகொண்டிருக்கும் பொழுது பேஸ்ட் தயார் பண்ணுங்கள். உளுந்து, கடலை பருப்பு, கொத்தமல்லி விதை, வர மிளகாய், வெந்தயம், மிளகு, கச கசா அனைத்தயும் மிதமான நெருப்பின் மேல் இருக்கும் வாணலியில் ஓவ்வோன்ராக வறுத்துக் கொள்ளுங்கள், வாசனை வரும், பருப்பு பொன்னிறமாகும்.
    வறுத்த பொருட்களை ஓன்று சேர்த்து நீரில் ஊற வையுங்கள்.

  4. 4

    தேங்காய் துண்டுகள், இஞ்சி பூண்டு, கூட சேர்த்து அறைத்து கொள்ளுங்கள்
    மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் பெருஞ்சீரகம். கடுகு, பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள்.வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை. மஞ்சள் சேர்த்து வதக்குங்கள்,

  5. 5

    வெங்காயம், நன்றாக வதங்கிய பின், தக்காளி சேர்த்து கிளற, வதங்கட்டும். 4கப் நீர், புளி பேஸ்ட் சேர்ததுக்கிளற. பாத்திரத்தை மூடி நெருப்பை அதிகரிக்க, கொதித்த பின் நெருப்பை குறைக்க. பின் வேகவைத்த நிலக்கடலையை குக்கரிலிறிந்து எடுத்து அதோடு சேர்த்து கிளற.

  6. 6

    கொதித்த பின் பேஸ்ட் தேங்காய் பால் சேர்த்து கிளற. உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்க

  7. 7

    சுவையான சத்தான மணமான கார சாரமான குழம்பு தயார். பரிமாறுவதற்க்கு முன் சுவைத்து பாருங்கள், சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி கூட சாப்பிடலாம்
    கவனிக்க நிலக்கடலை தோலிலிருக்கும் allergen சிலருக்கு அலர்ஜி தரும். உங்களுக்கு அலர்ஜி இருந்தால் வறுத்து தோல் நீக்கி வேகவைக்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes