முள்ளங்கி கீரை மணத்தக்காளி கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#CF7 #கூட்டு
கீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடம்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் உணவில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். மணத்தக்காளி கீரை எங்கள் தோட்டத்தில் தானகவே வளரும் . இயற்க்கை மருத்துவத்தில் மணத்தக்காளிக்கு ஒரு தனி இடம். இலை, காய், பழம், வத்தல் அனைத்தையும் நான் சமையலில் சேர்ப்பேன். முள்ளங்கி வாங்கும் பொழுது மேலிருக்கும் கொத்து கீரையுடன் வாங்குவேன், முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. கீரை சிறிது கசக்கும். கசப்பு அரு சுவையில் ஒன்று. அதனால் சமையலில் கசப்பான பொருட்களை சேர்க்க வேண்டும் எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1கப் பிரஷர் குக்கரில் வேகவைத்த பயத்தம் பருப்பு
  2. 6கப் முள்ளங்கி கீரை, இலைகள்,
  3. 2கப் மணத்தக்காளி கீரை, இலைகள்
  4. 1மேஜை கரண்டி தேங்காய் எண்ணை
  5. 1மேஜை கரண்டி உளுந்து
  6. ¼தேக்கரண்டி பெருங்காயம்
  7. 5கார மிளகாய் வத்தல்
  8. 1அங்குலம் இஞ்சி, பொடியாக நறுக்கியது
  9. 1/2தேக்கரண்டி பேகிங் சோடா
  10. 1தேக்கரண்டி பூண்டு, பொடியாக நறுக்கியது
  11. ½ தேக்கரண்டி மஞ்சள்
  12. 1மேஜை கரண்டி ஸ்பைஸ் மிக்ஸ் (தனியா, சீரகம், ஓமம். மிளகு பொடிகள்)
  13. 1/2கப் தேங்காய் பேஸ்ட்
  14. 1மேஜை கரண்டிஎலுமிச்சை பழச்சாறு
  15. தேங்காய் பேஸ்ட் செய்ய:
  16. 1மேஜைகரண்டி எண்ணை
  17. 1மேஜைகரண்டி தனியா
  18. 1மேஜைகரண்டி முழு உளுந்து
  19. 1மேஜைகரண்டி கடலை பருப்பு
  20. 1 பச்சை மிளகாய்’
  21. 1 அங்குலம் தோலுரிதத இஞ்சி
  22. 1 கப் தேங்காய் துண்டுகள்
  23. தேவையானஉப்பு
  24. 1மேஜைகரண்டிஎலுமிச்சை சாரு
  25. கூ ட்டு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

  3. 3

    ஒரு கிண்ணத்தில் நீர் சேர்த்து பயத்தம் பருப்பை பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க.

    தேங்காய் பேஸ்ட் செய்ய: மிதமான நெருப்பின்மேல் ஒரு சாஸ் பேனில் தேவையான பொருட்களை வாசனை வரும் வரை. வறுக்க. வறுத்த பொருட்களை 1கப் நீரில் 10 நிமிடம் ஊறவைக்க. மிக்ஸியில் கொற கொறவென்று அரைக்க

  4. 4

    கீரை இலைகளை நன்றாக கழுவுங்கள். பொடியாக வெட்டிக்கொள்ளுங்க;
    மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் உளுந்து,பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். மிளகாய் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க, மஞ்சள் சேர்க்க. கீரை சேர்த்து வதக்க 5 நிமிடங்கள்.

  5. 5

    பேகிங் சோடா சேர்க்க நிறம் மாறாமல் இருக்க,
    கீரை நன்றாக வதக்கிய பின் வேறு பாத்திரத்திர்க்கு மாற்றி விட்டேன் கீரையை மத்தால் மசித்து 1கப் நீர் சேர்க்க கீரை வேகும் பொழுது மூடக்கூடாது. ஸ்பைஸ் பொடி பருப்பு சேர்த்து கிளற-மேலும் 4 நிமிடங்கள் அடுப்பின் மேல்.

  6. 6

    தேங்காய் பேஸ்ட் சேர்த்து கிளற அடுப்பை அணைக்க.. உப்பு சேர்த்து கிளற. எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளற. இது மிகவும் முக்கியம், அப்பொழுதுதான் கீரையில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சேரும். ருசிக்க கீரை தயார். தனியாகவும் சாப்பிடலாம், சோறு நெய்யுடன் சாப்பிட்டால் ருசி அதிகம். நான் வேகவைத்த கீவா (quinoa) கூட கலந்து சாப்பிட்டேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes