கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
20 நபர்கள்
  1. 1.5 கிலோ கேரட்
  2. 1/2 லிட்டர் பால்
  3. 1 கிலோ சர்க்கரை
  4. 400 கிராம் இனிப்பில்லாத கோவா
  5. 10 ஏலக்காய்
  6. 1/2 கப் நெய்
  7. 25 முந்திரி
  8. 2 மேஜைக்கரண்டி உலர் திராட்சை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    கேரட்டை பெரிய சைஸ் துருவலில் துருவிக் கொள்ளவும். அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து அதில் கேரட் மற்றும் பால் சேர்த்து கலக்கவும். அடுப்பை ஆன் செய்து மூடி போட்டு கேரட் வத்தி வரும்வரை மிதமான தீயில் வேக விடவும்.

  2. 2

    கேரட் பாலில் விழுந்து பாதி அளவாகக் குறைந்து விடும். வெந்த கேரட் மசியும் வரை சமைக்கவும்.

  3. 3

    பிறகு இதில் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். சர்க் கரை சேர்த்தவுடன் கேரட் கலவை நீர்த்துவிடும். இதனை மேலும் கொஞ்ச நேரம் வேகவிட்டு கேரட் மற்றும் சர்க்கரை சுருண்டு வரும் வரை சமைக்கவும். இந்த நேரத்தில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து உருகியதும் முந்திரி சேர்த்து வறுக்கவும் பொன்னிறமாக வந்தவுடன் உலர் திராட்சை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

  5. 5

    இந்த தலைப்பை அடுப்பில் இருக்கும் கேரட் அல்வாவில் சேர்த்து கிளறவும். இனிப்பில்லாத கோவாவை கைகளால் உதிர்த்துவிட்டு அல்வாவில் சேர்க்கவும்.

  6. 6

    இதனை கலந்து அல்வா சுருண்டு வரும் நிலையில் அடுப்பை அணைக்கவும். சுவையான கேரட் அல்வா சூடாக சாப்பிட அருமையாக இருக்கும். நறுக்கிய பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும்.

  7. 7

    இந்த வருடம் 2021 ல் என் குடும்பத்தில் எனக்குப் பெருமை சேர்த்த சமையலில் முக்கியமானது இந்த ஹல்வா.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes