ரைஸ் டோக்ளா

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#அரிசி வகை உணவுகள்

குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும் போது சட்டென செய்து தரலாம் இந்த வித்தியாசமான ஸ்நாக்ஸ் . மீதியான சாதத்தை வைத்தும் இதை செய்யலாம். ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது.

ரைஸ் டோக்ளா

#அரிசி வகை உணவுகள்

குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும் போது சட்டென செய்து தரலாம் இந்த வித்தியாசமான ஸ்நாக்ஸ் . மீதியான சாதத்தை வைத்தும் இதை செய்யலாம். ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் சாதம்
  2. 1/2 கப் ரவை
  3. 1/2 கப் தயிர்
  4. தேவையானஅளவு உப்பு
  5. 1டீஸ்பூன் இஞ்சி துருவல்
  6. 1/2டீஸ்பூன் ஈனோ சால்ட்
  7. 1/4டீஸ்பூன் சீரக பொடி
  8. 1/4டீஸ்பூன் மஞ்சள் பொடி
  9. 1/4டீஸ்பூன் பெருங்காய பொடி
  10. 2டீஸ்பூன் எண்ணெய்
  11. 1/2டீஸ்பூன் கடுகு
  12. 1 பச்சை மிளகாய் நறுக்கியது
  13. 1/4+1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்
  14. சிறிதளவுகறிவேப்பிலை, மல்லி

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மசித்த சாதம், ரவை,தயிர், உப்பு,ஈனோ சால்ட், இஞ்சி,மஞ்சள் தூள்,1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், சீரக தூள், பெருங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

  2. 2

    இந்த கலவையை பதினைந்து நிமிடங்கள் வரை ஊற விடவும்

  3. 3

    பின் எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி இட்லி பானையில் 7 முதல் 10 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்

  4. 4

    ஆறியதும் கத்தியால் சதுரங்களாக துண்டு போடவும்

  5. 5

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை மல்லி, பச்சை மிளகாய்,1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் தாளித்து டோக்ளாவின் மேல் ஊற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes