அரிசி பாயசம்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

அரிசி பாயசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. 1/2 கப் பாஸ்மதி அரிசி
  2. 2 லிட்டர் பால்
  3. 2 கப் சர்க்கரை
  4. சிறிது ரோஸ் வாட்டர்
  5. 3 ஸ்பூன் நெய்
  6. அரைக்க:
  7. 10 முந்திரி
  8. 10 பாதாம்
  9. 4 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிறிது நெய் விட்டு பாஸ்மதி அரிசியை வதக்கவும் பின் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக உடைத்து வைக்கவும்

  2. 2

    முந்திரி பாதாம் ஏலக்காய் ஆகியவற்றை அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் பாதாம் தோலை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்

  3. 3

    பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்

  4. 4

    கொதி வரும் போது உடைத்த அரிசியை சேர்த்து மிதமான தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும் அவ்வப்போது கிளறி விடவும்

  5. 5

    அரிசி நன்கு வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    பின் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்

  7. 7

    பின் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து தொடர்ந்து சிறிது நேரம் வரை கிளறி விடவும்

  8. 8

    இதை சூடாக அல்லது குளிரவிட்டு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes