அச்சப்பம் / அச்சு முறுக்கு

அச்சப்பம் ஒரு பிரபலமான கேரளா ஸ்நாக்ஸ்.இது கிரன்ச் மற்றும் லைட்டான இனிப்பு.இது சிறப்பான வட்ட பூ வடிவமான அச்சில் செய்யப்படுகிறது.இந்த அச்சை முதல் தடவை பயன்படுத்துவதாக இருந்தால் கடாயில் எண்ணெய் சூடாக்கி (கொதி) அடுப்பை அணைத்துவிட்டு அந்த அச்சை ஒரு இரவு முழுவதும் அதனுள் விட்டு விடவும்.அப்போது அந்த அச்சில் வடிவல் சரியாக வரும்.

சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 3 முதல் 4 மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
அரிசியுடன் முட்டை சேர்த்து கிரைண்டரில் பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.மெதுவாக தேங்காய் பாலை சேர்க்கவும்.
- 3
இந்த மாவு தோசை மாவு பததிற்கு இருக்க வேண்டும்.
- 4
பிறகு அதில் சர்க்கரை,உப்பு,எள்ளு சேர்த்துக்கொள்ளவும்.
- 5
இதை 30 நிமிடங்கள் தனியாக வைக்கவும்.
- 6
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முதலில் முறுக்கு அச்சை அந்த எண்ணெயில் தொட்டுக்கொள்ளவும்(நனைத்து கொள்ளவும்) பிறகு அந்த அச்சை மாவினுள் வைத்து ஒற்றி எடுத்து எண்ணையில் பொறிக்கவும்.
- 7
அச்சு சூடாக இருந்தால் வெளியே எடுத்து விட்டு திரும்பவும் மாவினுள் ஒற்றி எடுக்கவும்.3/4 பங்கு மட்டுமே மாவை நனைக்க வேண்டும்.அச்சு முழுவதும் நனைக்க கூடாது.
- 8
அச்சை மாவிலினுள் இருந்து எடுத்து சூடான எண்ணெயில் வைத்து விடவும்.முறுக்கு வெந்த்தும் தானாக அச்சில் இருந்து எண்ணெயில் விழுந்து விடும்.(அல்லது லேசாக அசைத்தால் / ஸ்பூன் உபயோகித்தும்)
- 9
எல்லா பக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்
- 10
டிஸ்சு பேப்பர் கொண்டு எண்ணையை வடித்துக் கொள்ளவும்
- 11
மாவும் தீரும் வரை இப்படியே செய்யவும்.
- 12
யம்மி அச்சப்பம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்