பொடி கத்திரிக்காய் வறுவல்

#பொரியல்உணவுகள்
மசாலாப் பொருட்களை வறுத்து பிறகு அதனை பொடித்து கத்திரிக்காயினுள் வைத்து தயாரிக்க கூடிய சுவையான வறுவல்
பொடி கத்திரிக்காய் வறுவல்
#பொரியல்உணவுகள்
மசாலாப் பொருட்களை வறுத்து பிறகு அதனை பொடித்து கத்திரிக்காயினுள் வைத்து தயாரிக்க கூடிய சுவையான வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடி மசாலாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவும்
- 2
பிறகு அதனை மிக்ஸியில் சிறிது உப்பு சேர்த்து பொடியாக அரைக்கவும்
- 3
கத்தரிக்காயில் மேலே உள்ள காம்பை பாதியாக வெட்டி பிறகு அதனை 6 முதல் 8 பாகங்களாக கீறிக் கொள்ளவும்
- 4
இனி அரைத்து வைத்த பொடியை சிறிதளவு எடுத்து கத்தரிக்காயின் உள்ளே வைத்து அழுத்தவும்
- 5
இனி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்
- 6
பிறகு அதனை பொடி மசாலா வைத்த கத்தரிக்காயுடன் சேர்த்து மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து கிளறவும்
- 7
அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விடவும்
- 8
கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் மீதமுள்ள பொடியை தூவி நன்கு கிளறி இறக்கவும்.
- 9
இப்பொழுது முறுமுறுப்பான பொடி கத்தரிக்காய் வறுவல் தயார்.
Similar Recipes
More Recipes








கமெண்ட்