கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)

#book
மிகவும் சுலபமாக அபாரமான சுவையில் வீட்டிலேயே செய்து சுவைத்திட கேரமல் ப்ரெட் புட்டிங் செய்முறை இதோ!
கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)
#book
மிகவும் சுலபமாக அபாரமான சுவையில் வீட்டிலேயே செய்து சுவைத்திட கேரமல் ப்ரெட் புட்டிங் செய்முறை இதோ!
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கேக் டின் அல்லது பாத்திரத்தில் 1/4 கப் சர்க்கரையுடன் 1 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பொன்னிற கேரமல் வரும் வரை காய்ச்சவும். (பிரவுன் நிறமாகிவிட்டால் கசந்து விடும். கவனம் தேவை).
- 2
ஒரு மிக்ஸி ஜாரில், ஓரங்கள் நீக்கிய ப்ரெட் துண்டுகள், பால், முட்டை மற்றும் சர்க்கரை அனைத்தையும் சேர்த்து ஒரே கலவையாக வரும் வரை அரைத்து எடுக்கவும். வனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்
- 3
ஆறிய கேரமல் மீது இந்த கவலையை வடிகட்டி ஊற்றவும்.
- 4
குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி,ஸ்டாண்ட் வைத்து அதன் மீது கலவை ஊற்றி வைத்துள்ள கேக் டின்னை வைத்து மூடி போட்டு அவிக்கவும்.
- 5
1 விசில் வந்ததும் மிகக்குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
- 6
40 நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைத்து குளிரூட்டி பரிமாறவும். சுவையான கேரமல் ப்ரெட் புட்டிங் தயார்
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்