வெஜிடபிள் மஞ்சூரியன் பாக்ஸ் (Vegetable manjurian box Recipe in tamil)

#ரவைரெசிப்பீஸ்
வெஜிடபிள் மஞ்சூரியன் பாக்ஸ் (Vegetable manjurian box Recipe in tamil)
#ரவைரெசிப்பீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ரவையை மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும்
- 2
பொடித்த ரவையுடன் 2 டீஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு தண்ணீர், அரை டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து நன்றாக சாஃப்டாக பிசைந்து வைக்கவும்
- 3
ஸ்டெப்பிங் செய்வதற்கு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு,வெங்காயம், கேரட், பீன்ஸ், குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து காய்கறிகள் வேகும் வரை சிறிது நேரம் மூடி வைத்து நன்றாக வதக்கவும்
- 5
3 டீஸ்பூன் மைதா மாவில் சிறிது நீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்
- 6
சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைத்துள்ள ரவையை நீள் வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்
- 7
நீள்வட்டமாக தேய்த்த மாவை செவ்வக துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஓரங்களில் மைதா கரைசலை தடவிக் கொள்ளவும்.
- 8
செவ்வகமாக தேய்த்து வைத்துள்ள மாவின் ஓரத்தில் ஸ்டஃப்பிங் வைக்கவும்
- 9
ஸ்டஃப்பிங் வைத்த பிறகு அதை மடித்து கொள்ளவும்
- 10
மீதமுள்ள மாவில் குறுக்கு வாக்கில் கோடுகள் போடவும்
- 11
ஓரங்களில் மைதா கரைசலைத் தடவி நன்றாக மடித்துக்கொள்ளவும்.
- 12
எல்லா மாவையும் இதுபோல் செய்து தட்டில் அடுக்கி கொள்ளவும்
- 13
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தி அதில் இந்த மஞ்சூரியன் பாக்ஸ்களை பொரித்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes








கமெண்ட்