சாக்கோ ரவா கேக் (Choco Rava Cake Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேக் மோல்டில் வெண்ணெய் தடவி மாவு தூவி வைக்கவும்.
- 2
அவனை 180 டிகிரி சென்டிகிரேடில் முற்சூடு (preheat) செய்யவும்.
- 3
ஒரு பவுலில் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், பொடித்த சீனி, கோகோ பவுடர், ரவை முதலியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 4
கலந்த பின்னர் சமையல் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்துக் கலக்கவும்.
- 5
பின்னர் 100 மில்லி பால் சேர்த்துக் கலந்து பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
- 6
பத்து நிமிடம் கழித்து மீதியுள்ள பாலைக் கேக் கலவையோடு சேர்த்துக் கலக்கவும்.
- 7
பாதி பாதாம் பிஸ்தா துண்டுகள், கிரான் பெர்ரிஸ், கிஸ்மிஸ் சேர்த்துக் கலந்து கலவையை கேக் மோல்டில் ஊற்றவும்.
- 8
கேக் கலவையின் மேல் மீதமுள்ள பாதாம் பிஸ்தா துண்டுகள், கிரான் பெர்ரிஸ், கிஸ்மிஸ் சேர்த்துத் தூவவும்.
- 9
சூடுபடுத்திய அவனில் கேக் கலவையை வைத்து பதினைந்து நிமிடங்கள் அல்லது கேக் வேகும் வரை பேக் செய்யவும்.
- 10
வெந்ததும் வெளியே எடுத்து நன்கு ஆற வைத்துப் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes






கமெண்ட்