முளைக்கட்டிய கேழ்வரகு லட்டு (Mulaikattiya kelvaraku laddo recipe in tamil)

Afra bena @cook_20327268
முளைக்கட்டிய கேழ்வரகு லட்டு (Mulaikattiya kelvaraku laddo recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேழ்வரகை சுத்தம் செய்து 6மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு அவற்றில் தண்ணீரை வடித்து விட்டு வெள்ளை துணியில் போட்டு இறுக கட்டி கொள்ளவும்.
- 3
அவற்றை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி இருட்டில் வைத்து முளைக்கட்டி வைத்து கொள்ளவும்.
- 4
பின் அவற்றை காய வைத்து பொடி செய்து எடுத்து கொள்ளவும்.
- 5
பின்னர் கேழ்வரகு மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து புட்டு போல் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- 6
வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்து கேழ்வரகு புட்டுடன் சேர்க்கவும்.
- 7
அவற்றில் வெல்லம் சேர்த்து மூன்றையும் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 8
அவற்றை உருண்டைகளாக பிடித்து லட்டு போல் செய்து கொள்ளவும்.
- 9
அதன் மேலே முந்திரி பாதாம் வைத்து பரிமாறவும். சுவையான சத்தான முளைக்கட்டிய கேழ்வரகு லட்டு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12602893



கமெண்ட் (2)