ஸ்ட்ராபெர்ரி ஹனீ கேக் (Strawberry honey cake recipe in tamil)

ஸ்ட்ராபெர்ரி ஹனீ கேக் (Strawberry honey cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்து நன்றாக நுரைப்பொங்கும் அளவிற்கு எலெக்ட்ரிக் பீட்டரில் அடித்து கொள்ளவும்.
- 2
மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து கலந்து விடவும்.
- 3
பின் மைதா மாவு, உப்பு,பேக்கிங் பவுடர், இவற்றை சலித்து சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
அவற்றில் எண்ணெய் மற்றும் பால் சேர்த்து கலந்து விட்டு அடித்து வைத்துள்ள முட்டையின் வெள்ளைக்கருவை சேர்க்கவும்.
- 5
கேக் மோல்டில் வெண்ணெய் சிறிது தடவி கேக் கலவையை அதில் ஊ ற்றவும்.
- 6
அவற்றை ஓவனில் 280°செல்சியஸ் 10நிமிடம் முன் சூடுபடுத்தி பின் ஓவனில் வைத்து 35-40நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.ஆறவிடவும்.
- 7
ஒரு வாணலியில் 2ஸ்பூன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து 1ஸ்பூன் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி கேக்கின் மேல் சிறுசிறு துளைகள் இட்டு தடவி விடவும்.
- 8
பின் ஜாமை வாணலியில் போட்டு தேன் விட்டு கலந்து எடுத்து கேக்கின் மேல் தடவி விடவும். அதன் மேல் உலர்ந்த தேங்காய் துருவலை தூவி ஃப்ரிஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.
- 9
குறிப்பு: தேங்காய் துருவல் ஃப்ரெஷாக இருந்தால் வெறும் வாணலியில் சேர்த்து கலர் மாறாமல் வறுத்து எடுத்து உபயோகிக்கவும்.கேக் குக்கரில் செய்வதாக இருந்தால் குக்கரில் உப்பு சேர்த்து முன்சூடுபடுத்தி 30-35 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி (Thalappakatti chicken masala powder recipe in tamil)
- Spicy கத்தரிக்காய் வறுவல் (Spicy kathirikkaai varuval recipe in tamil)
- செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை (Chettinadu special ukkaarai recipe in tamil)
- புதினா குருமா (Pudhina kuruma recipe in tamil)
- காரசாரமான காளான் கறி (Kaalaan kari recipe in tamil)




கமெண்ட்