சிக்கன் முர்தாபா (Chicken murthaapa recipe in tamil)

#arusuvai2
#goldenapron3
சவூதி ஸ்பெஷல் ரெசிபி
சிக்கன் முர்தாபா (Chicken murthaapa recipe in tamil)
#arusuvai2
#goldenapron3
சவூதி ஸ்பெஷல் ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் மைதா மாவு, 1/4டீஸ்பூன் உப்பு,1டீஸ்பூன் சர்க்கரை,2ஸ்பூன் உருக்கிய வெண்ணெய்,1முட்டை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
பின் 1/4கப் வெதுவெதுப்பான பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக பிசைந்து எண்ணெய் சிறிதளவு சேர்த்து பிசையவும்.30நிமிடம் ஊறவிடவும்.
- 3
சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
- 4
சிக்கன் -ஐ மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து நறுக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 5
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்,துருவிய கேரட் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய பச்சை மிளகாய், கொடைமிளகாய்,முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
பின் அரைத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும். அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வேகவிடவும.
- 7
பின் நன்றாக வெந்ததும் சிறிதளவு கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட்டு எடுத்து ஒரு பவுலில் மாற்றவும். அதனுடன் 2முட்டை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 8
பின் மாவு உருண்டையை எடுத்து நன்றாக மெல்லியதாக சப்பாத்தி போல் தேய்த்து அதனுல் சிக்கன் கலவையை ஒரு ஸ்பூன் வைத்து நான்காக பெட்டி போல் மடிக்கவும்.
- 9
ஒரு பவுலில் 1முட்டையை அடித்து வைத்து கொள்ளவும். பின் அடுப்பில் தவா வைத்து மடித்து வைத்துள்ள முர்தாபாவை எடுத்து அதன் முட்டையை தடவி தவாவில் சேர்த்து நன்றாக நான்கு புறமும் வேகவிடவும.
- 10
நன்றாக வெந்ததும் சூடாக எடுத்து பரிமாறவும். சுவையான சிக்கன் முர்தாபா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி (Thalappakatti chicken masala powder recipe in tamil)
- Spicy கத்தரிக்காய் வறுவல் (Spicy kathirikkaai varuval recipe in tamil)
- செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை (Chettinadu special ukkaarai recipe in tamil)
- புதினா குருமா (Pudhina kuruma recipe in tamil)
- காரசாரமான காளான் கறி (Kaalaan kari recipe in tamil)









கமெண்ட்