திராட்சைப் பழச்சாறு (Grapes juice recipe in tamil)

#arusuvai3
#goldenapron3
பொதுவாக திராட்சையில் கொட்டை இருப்பதால் அதை உண்பதற்கு குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். ஆனால் திராட்சைப் பழக் கொட்டைகள் தான் அதிக சத்து உள்ளது. திராட்சையில் டார்டாரிக் அமிலம் உள்ளது. இனிப்பு புளிப்பு துவர்ப்பு சுவையாகவும் இருக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். பால் சேர்ப்பதனால் உடலுக்கு கால்சியம் சத்தும் தரும்.

சமையல் குறிப்புகள்
- 1
திராட்சையை நன்கு சுத்தம் செய்து இரண்டு மூன்று முறை கழுவி ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும். திராட்சையில் கொட்டை இருப்பதால் குழந்தைகள் அதை சரியாக சாப்பிட மாட்டார்கள். அதை மிக்ஸியில் அடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின் அதை நன்கு வடிகட்டி ஒரு கப்பில் வைத்து கொள்ளவும். 2 குழிக்கரண்டி நன்னாரி சர்பத்தை அந்த சாற்றுடன் நன்கு கலக்கவும்.
- 3
காய வைத்து ஆறிய பசும்பாலை அந்த சாற்றுடன் சேர்த்து கலக்கவும். பால் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும். சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பருகினால் மிகவும் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்