சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை கொண்ட கடலையை கழுவி 8 மணி நேரம் ஊறவைத்து 7-8 விசில் வரை சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
- 2
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.
- 4
அதே கடாயில் அரைத்து வைத்த பேஸ்ட்யை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், சர்க்கரை, டொமட்டோ சாஸ், உப்பு, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம்கொதிக்க பின் வேக வைத்த கடலையை மசித்து சேர்த்து கிரேவி பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து இரக்கவும்.
- 5
கிரேவியை தட்டில் ஊற்றி மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை மற்றும் ஓமப்பொடி சேர்த்து அலங்கரித்து அருமையான சன்னா சாட் ஸ்ட்ரீட் உணவை நம் வீட்டிலேயே சுவைக்கலாம் 😋😋😋
- 6
குறிப்பு 1: கடலையில் உப்பு சேர்த்து வேகவைப்பதால் உப்பை சுவைக்கேற்ப பார்த்து சேர்க்கவும்
- 7
குறிப்பு 2: கடலை வேக வைத்த தண்ணீரை நாம் கிரேவி செய்ய பயன் படுத்தி கொள்ளலாம்.
Similar Recipes
More Recipes









கமெண்ட்