சன்னா சாட் (Channa chat recipe in tamil)

Priya Raji
Priya Raji @cook_22193663

சன்னா சாட் (Channa chat recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

C1/2 மணி  நேரம்
2 பரிமாறுவது
  1. 100 கிராம் வெள்ள கொண்ட கடலை
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 10 பல் பூண்டு
  5. 1/2 இன்ச் இஞ்சி
  6. 1ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  7. 1 ஸ்பூன் சர்க்கரை
  8. 2ஸ்பூன் டொமட்டோ சாஸ்
  9. சால்ட் உப்பு (தேவைக்கு ஏற்ப)
  10. சிறிதளவுகொத்தமல்லி தழை
  11. 2ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

C1/2 மணி  நேரம்
  1. 1

    வெள்ளை கொண்ட கடலையை கழுவி 8 மணி நேரம் ஊறவைத்து 7-8 விசில் வரை சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.

  4. 4

    அதே கடாயில் அரைத்து வைத்த பேஸ்ட்யை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், சர்க்கரை, டொமட்டோ சாஸ், உப்பு, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம்கொதிக்க பின் வேக வைத்த கடலையை மசித்து சேர்த்து கிரேவி பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து இரக்கவும்.

  5. 5

    கிரேவியை தட்டில் ஊற்றி மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை மற்றும் ஓமப்பொடி சேர்த்து அலங்கரித்து அருமையான சன்னா சாட் ஸ்ட்ரீட் உணவை நம் வீட்டிலேயே சுவைக்கலாம் 😋😋😋

  6. 6

    குறிப்பு 1: கடலையில் உப்பு சேர்த்து வேகவைப்பதால் உப்பை சுவைக்கேற்ப பார்த்து சேர்க்கவும்

  7. 7

    குறிப்பு 2: கடலை வேக வைத்த தண்ணீரை நாம் கிரேவி செய்ய பயன் படுத்தி கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priya Raji
Priya Raji @cook_22193663
அன்று

Similar Recipes