மூளை வறுவல்

Vimala christy @vims2912
#hotel . கொங்கு நாட்டு கறி உணவு.. கொங்கு பகுதி ஹோட்டலில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி உணவு. காலையிலேயே கிடைக்கும் உணவு.
மூளை வறுவல்
#hotel . கொங்கு நாட்டு கறி உணவு.. கொங்கு பகுதி ஹோட்டலில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி உணவு. காலையிலேயே கிடைக்கும் உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
மூளையை கரண்டி கொண்டு உடைத்து விடவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீரி கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
உதிர்த்த மூளையை சேர்த்து பிறகு மஞ்சள் தூள் உப்பு,கறி மசாலா 3டீஸ்பூன் நீர் விட்டு வேக விடவும். வெந்ததும் சுருண்டு வரும் போது கொத்தமல்லி கருவேப்பிலை மிளகு தூள் சேர்த்து ஒரு கிளறி இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13055095










கமெண்ட்