காரா நீர் தோசை

#breakfast
கடலோர கர்நாடக மாநிலத்தில் மிகவும் வழக்கமானது. குறிப்பாக மங்களூர், உடுப்பி பகுதி உணவு
காரா நீர் தோசை
#breakfast
கடலோர கர்நாடக மாநிலத்தில் மிகவும் வழக்கமானது. குறிப்பாக மங்களூர், உடுப்பி பகுதி உணவு
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை இரவே தண்ணீரில் அலசி ஊறவைத்து கொள்ள
- 2
காலையில் மிக்ஸி ஜாரில் நீர் இறுத்து அரிசி, மிளகாய், கொத்தமல்லி விதை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.. அதனுடன் தேங்காய்,வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து மிகவும் மைய அரைத்து கொள்ளவும்
- 3
பின் ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மாவு, நீர்மோர் பதத்திற்கு இருக்க வேண்டும்
- 4
பின் அடுப்பில் தோசை கல்லை வைத்து நன்கு சூடான பிறகு ரவா தோசை போல் வார்த்து ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறு பக்கம் வேக வைத்து எடுக்கவும். இதே போல மற்ற தோசைகளையும் வார்த்து எடுக்க..
- 5
இதற்கு தேங்காய் சட்னி அல்லது சிக்கன் குழம்பு நல்ல துணை
Keywords
Similar Recipes
More Recipes










கமெண்ட் (2)