முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா

Guru Kalai @cook_24931712
முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு ரவை உப்பு மூன்றையும் சேர்த்து நன்றாக பிசையவும்
- 2
பிசைந்த மாவை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்
- 3
மசாலாவுக்கு தேவையான பொருட்கள்
- 4
உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அத்துடன் முளைகட்டிய பச்சைப் பயிறு சேர்த்து நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து கரம் மசாலா மிளகாய்த் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 5
பிசைந்த மாவை சப்பாத்தி தேய்ப்பது போல் நன்றாக தேய்த்து சமோசா சீட் செய்து கொள்ளவும்
- 6
செய்து வைத்த சமோசா சீட்டில் மசாலாவை வைத்து சமோசா வடிவில் மடித்து கொள்ளவும்
- 7
எண்ணெயை நன்றாக காயவைத்து மடித்த சமோசாவை போட்டு பொரித்துக் கொள்ளவும்
- 8
இப்பொழுது மிகவும் ஆரோக்கியமான முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13262242




















கமெண்ட்