வெஜ் மோமோஸ் மற்றும் சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
மோமோஸ் தயாரிக்க முதலில் மாவு பிசைய வேண்டும் அதற்கு மைதா உப்பு எண்ணெய் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
மாவை பிசைந்த பின்பு அதை மூடி போட்டு 30 நிமிடம் மூடி வைக்கவும்.
- 3
அடுத்து மோமோஸ் நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய் பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- 4
வெங்காயம் நிறம் மாறிய பின்பு மிளகாய் கேரட் முட்டைக்கோஸ் உப்பு மிளகுத்தூள் சோயா சாஸ் வினிகர் சேர்த்து சிறிது நேரம் கிளறி பின்பு இறக்கி வைக்கவும்.
- 5
செய்து வைத்த மாவில் மோமோஸ் கலவையை சேர்த்து அதனை முழுவதும் மூடி வைக்கும்படி அதனை வடிவமைத்துக் கொள்ளவும்
- 6
செய்து வைத்த முகமோ சை ஒரு இட்லி தட்டில் தண்ணீர் ஊற்றி அதனை பத்து நிமிடத்திற்கு வேக வைக்கவும். 10 நிமிடம் வெந்த பின் சூடான மோமோஸ் தயார்
- 7
இதற்கு சட்னி செய்ய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு 8 காய்ந்த மிளகாய் வேக வைத்துக் கொள்ளவும்
- 8
அடுத்து மூன்று தக்காளியை தண்ணீரில் சேர்த்து வேகவைத்து தோலை எடுத்து அதனை வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 9
அடுத்து ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதனை சூடு ஏற்றி பின்பு நறுக்கிய தக்காளி பூண்டு இஞ்சி வேகவைத்த காய்ந்த மிளகாய் உப்பு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 10
இந்த கலவையை ஒரு மிக்ஸியில் சேர்த்து கொத்தமல்லி இலை சிறிது சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். சுவையான மோமோ சும் அதற்கு தொட்டுக்க மோமோஸ் சட்னியும் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்