சமையல் குறிப்புகள்
- 1
மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கழுவி மட்டனை சுத்தம் செய்யவும்.
- 2
ஆறு சிவப்பு மிளகாயை சுடுதண்ணீரில் ஊறவைத்து தயிர் சேர்த்து அரைக்கவும்.
- 3
அரைத்த மிளகாய் விழுதை சுத்தம் செய்த மட்டனை சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
சம அளவு இஞ்சி, பூண்டு, 5 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 5
வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு,மல்லி, கிராம்பு,ஏலக்காய்,பட்டை லவங்கம், அன்னாசிப் பூ ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்கவும் ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- 6
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 7
குக்கரில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடு படுத்தவும். அதில் இரண்டு பிரியாணி இலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- 8
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அரைத்த இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 9
இஞ்சி பூண்டு கலவையும் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி புதினா கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 10
வறுத்து அரைத்த பிரியாணி மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 11
ஊற வைத்த மட்டன் கலவையை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 12
ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் போட்டு 8 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.
- 13
குக்கரை திறந்து ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் இரண்டு தேக்கரண்டி நெய், புதினா கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 14
சுவையான விருதை ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.
Similar Recipes
More Recipes


















கமெண்ட் (3)