பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,
இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,
இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப் பருப்பை நன்றாகக் கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறிய பிறகு அதில் காய்ந்த மிளகாய் சோம்பு பெருங்காயம் கருவேப்பிலை உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
- 2
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்த்து உருண்டையாக தட்டவும்
- 3
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சிவக்க வதக்கி பிறகு அதில் தக்காளி ஒன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆறவிடவும்
- 4
நன்றாக ஆறிய உடன் சோம்பு தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
- 5
அரைத்த கலவையை புளித்தண்ணீரை சேர்த்து கலந்து கொள்ளவும்
- 6
மற்றொரு கடாயில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி கடுகு வெந்தயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் பூண்டு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 7
பிறகு மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 8
குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒன்றின் பின் ஒன்றாக போடவும். உருண்டை முக்கால் பதம் வெந்ததும் கரைத்து வைத்திருக்கும் மசாலா புளி கலவையை சேர்க்கவும். உருண்டைகளை திருப்பிவிட்டு மேலும் 5 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்.
- 9
கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்