சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் அரிசி மாவு, உப்பு சேர்த்துத் தேவையான அளவு வெந்நீர் சேர்த்துப் பிசையவும்.
- 2
பிசைந்த மாவை சிறிய அளவில் நீள வடிவத்தில் கொழுக்கட்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 3
பின்னர் உருட்டிய கொழுக்கட்டை களை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- 4
ஒரு கடாயில் ஒரு கப் பால் சேர்த்துக் காய்ந்ததும் வெந்த பாசிப்பருப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
- 5
கொதித்ததும் வேகவைத்த கொழுக்கட்டைகளைச் சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
கொதித்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பின்னர் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
- 7
நாட்டு சர்க்கரை கரைந்ததும் சுக்குப் பொடி, ஏலக்காய் பொடி சேர்க்கவும். கொதித்ததும் இறக்கவும்.
- 8
சூடாகப் பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13420864















கமெண்ட்