அதிரசம் (Athirasam recipe in tamil)

பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று அதிரசம். தமிழ் நாட்டில் பண்டிகை நாட்களில் செய்வது வழக்கம். என்னுடைய முதல் முயற்சியாக நான் செய்திருக்கிறேன். மிகவும் சுவையாக இருந்தது.
அதிரசம் (Athirasam recipe in tamil)
பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று அதிரசம். தமிழ் நாட்டில் பண்டிகை நாட்களில் செய்வது வழக்கம். என்னுடைய முதல் முயற்சியாக நான் செய்திருக்கிறேன். மிகவும் சுவையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு துணியில் உலர்த்தவும்.
- 2
அரைமணிநேரம் உலர்ந்த பின் அரிசியை மிக்சியில் அரைத்து மாவாக்கவும்.
- 3
வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
பாகு தண்ணீரில் போடும் போது கரையாமல் கையில் எடுத்து உருட்டினால் உருட்ட வரும் போது இறக்கவும்.
- 5
அரிசி மாவு, ஏலக்காய் பொடி சேர்த்து வெல்லப்பாகோடு கலந்து கிளறவும்.
- 6
நன்கு ஆறியதும் மூடி வைத்து இரண்டு நாட்கள் கழித்து அதிரசம் செய்யலாம்.
- 7
சிறிதளவு அதிரச மாவை எடுத்து ஒரு பாலிதீன் கவர் அல்லது வாழை இலைத் துண்டில் தட்டி எண்ணெய் காய்ந்ததும் போடவும்.
- 8
இருபுறமும் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுத்து ஆறவைத்து ஆறியதும் மூடி போட்ட பாத்திரத்தில் வைக்கவும். பத்து நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
Similar Recipes
More Recipes












கமெண்ட் (8)