பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
சிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.
இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.
இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை முதலில் நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஊற வைப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.ஆச்சி சிக்கன் 65 மசாலா எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
கழுவிய சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவேண்டும் பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, காஷ்மீரி சில்லி பவுடர்,தயிர், ஆச்சி சிக்கன் 65 மசாலா அனைத்தையும் சேர்த்து நன்றாக பிரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் எலுமிச்சம் பழம் பிழிந்து கொள்ள வேண்டும். கடைசியாக சோள மாவு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
- 3
இந்தப் பொருள்கள் அனைத்தையும் நன்றாக சிக்கனுடன் கலந்து பிரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மசாலா கலந்த சிக்கன் ஒரு மணி நேரம் ஊற வேண்டும்.
- 4
ஒரு மணி நேரம் நன்றாக ஊறிய சிக்கனை பொரிப்பதற்கு ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.எண்ணெய் சூடேறியதும் சிக்கனை அதில் போட வேண்டும்.சிக்கன் நன்றாக வெந்தவுடன் எடுத்து விட வேண்டும்.
- 5
இப்பொழுது சுவையான சிக்கன் 65 ரெடி...
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்