கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)

Durga
Durga @cook_25671729

#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடை

கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)

#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பேர்
  1. 250 கிராம் கடலை பருப்பு
  2. உப்பு தேவைக்கு ஏற்ப
  3. 5பல் பூண்டு
  4. கறிவேப்பிலை
  5. கொத்தமல்லி
  6. 3பச்சை மிளகாய்
  7. 100கிராம் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  8. 1 தேக்கரண்டிசோம்பு
  9. பொறிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    3 மணி நேரம் கடலை பருப்பை ஊற வைத்து கொள்ளவும்

  2. 2

    பின் தண்ணீர் வடித்து எடுத்து கொண்டு பூண்டு, சோம்பு, உப்பு சேர்க்கவும்

  3. 3

    நீர் சேர்க்காமல் இவை அனைத்தையும் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்

  4. 4

    அரைத்த வடை மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்

  5. 5

    பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் மாவினை வட்டமாக தட்டி எண்ணையில் பொரிக்கவும்

  6. 6

    இரு புறமும் நன்றாக சிவந்து வெந்த உடன் எண்ணெயிலிருந்து வெளியே எடுக்கவும்

  7. 7

    பின் சூடான டீ உடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Durga
Durga @cook_25671729
அன்று

கமெண்ட் (3)

Durga
Durga @cook_25671729
நன்றி அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்ய முயற்சி செய்கிறேன்

Similar Recipes