சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு கடாயை வைக்கவும் அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும் சிறிய கிண்ணத்தில் சாக்லேட் போட்டு 50 கிராம் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அந்த கிண்ணத்தை தண்ணீர் ஊற்றிய கடாயின் மேல் வைத்து சாக்லேட்டை நன்றாக உருக்கவும்.
- 2
பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைக்கவும். அதன் உள்ளே உப்பு போட்டு பரப்பி வைக்கவும். குக்கர் 10 நிமிடம் சூடு ஏற வேண்டும். அதற்குள் கேக் செய்வதற்கான பொருள்களை ரெடி பண்ண வேண்டும். ஒரு சல்லடை எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு கப் மைதா, ஒரு கப் பொடித்த சீனி, கால் கப் கோகோ பவுடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சலித்துக் கொள்ளவும்.
- 3
சலித்த கலவையில் முக்கால் கப் பால் ஊற்றி அதனுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். அதனுடன் உருக்கி வைத்த சாக்லேட்டை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ண வேண்டும்.
- 4
மூன்று சிறிய கிண்ணம் எடுத்துக் கொள்ளவும். அதில் நன்றாக வெண்ணையை தடவ வேண்டும். பிறகு மிக்ஸ் பண்ண கலவையை மூன்று கிண்ணங்களில் ஊற்றவேண்டும். அந்த சூடு ஏறிய குக்கரில் கிண்ணத்தை ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் ஒரு தட்டு வைத்து அந்த தட்டில் இந்த கிண்ணத்தை வைக்க வேண்டும்.
- 5
குக்கரில் 1 கிண்ணத்தை வைக்கலாம் அல்லது 3 கிண்ணங்கள் சேர்த்தும் வைக்கலாம். இப்பொழுது குக்கரை மூடவும். 10 அல்லது 12 நிமிடம் வேக வைக்கவும். 10 அல்லது 12 நிமிடம் கழித்து குக்கரை திறந்து பார்க்கவும். கேக் கிண்ணத்தை எடுத்து அதை லேசாக சேக் பண்ணி பார்க்கவும். கேக் லேசாக ஆட வேண்டும். அதிகமாக சேக் ஆக கூடாது. அப்படியிருந்தால் அதை எடுத்து ஆற வைக்கவும். ஆறியவுடன் ஒரு தட்டில் கவிழ்த்து கொள்ளவும். அதன் மேல் பொடித்த சீனியை தூவிக் கொள்ளவும்.
- 6
ஆறிய பின்பு அந்த கேக்கை கட் பண்ண வேண்டும். கட் பண்ணிய கேக்கிலிருந்து சாக்லேட் வடிய வேண்டும். இப்பொழுது சுவையான சாக்லேட் லாவா கேக் ரெடி...
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட்