உருளைக்கிழங்கு பால்கறி (Urulaikilangu Paalkari)
"உருளைக்கிழங்கு பால்கறி" இதில் பட்டர் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு சேர்ந்து செய்யும் ஒரு பால் கறி ஆகும். அதனால் இதில் கார்போஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின் 'ஏ' சத்துகள் நிறைந்துள்ளன. இதில் புளிப்பு, மசாலா, காரம் ஏதும் இல்லாததால் அல்சருக்கு நல்லது. மிகவும் சுவையாகவும் இருக்கும். இது மதுரை ஸ்பெஷல் ஒரு ரெசிபி ஆகும்.

சமையல் குறிப்புகள்
- 1
உருளைகிழங்கு, கேரட் இவற்றை நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் பட்டர்பீன்ஸ் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு குக்கரை வைக்கவும். அதில் இந்த 3 காய்களையும் போடவும். இந்த காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
- 2
அதன்பின், ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், பெருஞ்சீரகம், கசகசா, பூண்டு இவற்றை எல்லாம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை காயுடன் சேர்க்கவும். அதற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாக காய்களை கிளறிவிட்டு காய் வேகும் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
இப்பொழுது குக்கரை மூடவும் 3 விசில் வந்ததும் இறக்கி விடவும். 5 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும். அதில் பாலை ஊற்றவும். பின்பு அதை நன்றாக கிளறி விடவும். உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ், கேரட் சேர்ந்த கலவையுடன் பால் நன்றாக சேரும்படி கிளறவேண்டும். இவை அனைத்தும் கெட்டியான கிரேவி போல இருக்க வேண்டும். குக்கரை அப்படியே இறக்க வேண்டும்.
- 4
இப்பொழுது பால்கறி தயார். இதை தாளிக்க ஒரு கடாயில் 3 ஸ்பூன் நெய் ஊற்றவும். அதில் பிரியாணி இலை பட்டை பூ சேர்த்து தாளிக்கவும்.இதை பால்கறியில் சேர்க்கவும்.
- 5
சுவையான மதுரை ஸ்பெஷல் "உருளைக்கிழங்கு பால்கறி" ரெடி...
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்