ஜில் ஜில் ஜிகர்தண்டா (Jiharthanda recipe in tamil)

#cookwithmilk ஜிகர்தண்டாவை ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும்... மிகவும் ருசியான அருமையான ஒரு குளிர்பானம்... வெயில் காலங்களில் சாப்பிட ஏற்றதுஅதிக புரதச்சத்தை கொண்டது....
ஜில் ஜில் ஜிகர்தண்டா (Jiharthanda recipe in tamil)
#cookwithmilk ஜிகர்தண்டாவை ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும்... மிகவும் ருசியான அருமையான ஒரு குளிர்பானம்... வெயில் காலங்களில் சாப்பிட ஏற்றதுஅதிக புரதச்சத்தை கொண்டது....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முழு கிரீம் பால் அரை லிட்டர் எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். பால் பொங்கியதும் அதனுடன் கேராமல் எசன்ஸ் அல்லது நாட்டுச் சர்க்கரை இனிப்புக்கு தகுந்தவாறு சேர்த்து கிளறவும்... பிறகு அதனுடன் இரண்டு ஸ்பூன் கான்பிளவர் மாவை சிறிது ஆறிய பாலில் கலக்கி கொதிக்கின்ற பாலில் ஊற்றி கிளறவும். நன்கு கெட்டியாக கூல் போன்ற பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும்... நன்றாக ஆறிய பிறகு ஒரு கன்டெய்னரில் ஊற்றி ஆறு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்... இப்போது ஜிகர்தண்டா ஐஸ்கிரீம் தயாராகிவிட்டது...
- 2
அரை லிட்டர் தண்ணீர் ஊற்றாத கெட்டியான பாலை பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதி வந்ததும் குறைந்த தீயில் சுண்டக் காய்ச்சவும். அதனுடன் 5 ஸ்பூன் கேராமல் எசன்ஸ் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி இறக்கவும்... பிறகு மற்றொரு பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை சேர்த்து நன்கு சுண்டக் காய்ச்சவும். நன்கு பால்கோவாவிற்கு முந்தின பதம் வரும் வரை காய்ச்சி இறக்கவும்... பின்பு சுண்ட காய்ச்சிய பால் மற்றும் ஆடை திரண்ட பால் இரண்டையும் ஒரு கன்டெய்னரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் 6 மணி நேரம் வைத்துக் கொள்ள வேண்டும்...
- 3
நன்னாரி சர்பத் எடுத்து வைத்துக் கொள்ளவும்.. பிறகு பாதாம் பிசின் இரண்டு அல்லது மூன்று துண்டுகளை தண்ணீரில் போட்டு பிரிட்ஜில் ஆறு மணி நேரம்வைத்துக்கொள்ளவும்... தயார் செய்த அனைத்தையும் முந்தைய தினத்தில் செய்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்..
- 4
தயாரித்த அனைத்தையும் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.. பிறகு ஒரு டம்ளர் எடுத்து முதலில் இரண்டு ஸ்பூன் ஊறவைத்த பாதாம் பிசினை போட்டுக்கொள்ளவும் ஒரு ஸ்பூன் நன்னாரி சர்பத் சேர்த்துக் கொள்ளவும்.. சுண்டக் காய்ச்சிய பால் சிறிது ஊற்றிக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கிரீம் ஒரு ஸ்கூப் வைத்து அதன் மேல் ஆடை திரண்ட பாலை ஊற்றினால் மிகவும் சுவையான ஜிகர்தண்டா தயார்..
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட் (3)