தயிர், வெண்ணெய் இல்லாம வீட்டிலேயே செய்யலாம் நெய் (Nei recipe in tamil)

Belji Christo @cook_20603733
தயிர், வெண்ணெய் இல்லாம வீட்டிலேயே செய்யலாம் நெய் (Nei recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தினமும் ராத்திரி பால் காய்ச்சி மூடிபோட்டு வச்சுக்கோங்க. காலைல பால் மேல பாலாடை கட்டியிருக்கும். அதை எடுத்து ஒரு பாக்ஸில் போட்டு ஃப்ரீஸரில் வச்சுக்கலாம். இந்த மாதிரி ஒரு பதினைந்து நாளைக்கு எடுத்து சேமித்து வைக்கலாம்.
- 2
நெய் பண்ற அன்னைக்கு பாலாடை ஃப்ரீசரில் இருந்து எடுத்து இரண்டு மணி நேரம் வெளியே வைக்கவும். இப்போ அடிகனமான ஒரு கடாயில் பாலாடை போட்டு நன்கு கலந்து விட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். கொஞ்ச நேரத்திலேயே நெய் பிரிந்து வர ஆரம்பிச்சிடும். அது ஒரு 25 ல் இருந்து 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்..
- 3
நெய் பிரிந்து மீதி இருக்கிற ஆடை பிரவுன் கலர் வர வரைக்கும் கலந்து விட்டுட்டே இருக்கணும். பிரவுன் கலர் வந்தவுடனே அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இறக்கவும். ஆறியபின் வடிகட்டி எடுக்கவும். வீட்ல செஞ்ச சத்தான சுவையான நெய் தயார் ஆயிடுச்சு.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13732613












கமெண்ட் (2)