Milk poori பால் பூரி (Paal poori recipe in tamil)
Week 9
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் கோதுமை மாவு,நெய்,உப்பு, தண்ணீர் தேவையான அளவு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து 30 நிமிடம் ஊற விடவும்.
- 2
ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரி போல தேய்த்து முள் கரண்டியால் ஆங்காங்கே குத்தவும். அப்பொழுது தான் பூரி உப்பாமல் இருக்கும்.
- 3
தேய்த்த மாவை சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 4
மிக்ஸி ஜாரில் அரிசி மாவு மற்றும் கசகசாவை சேர்த்து நன்றாக நைசாக பொடித்துக் கொள்ளவும்
- 5
முந்திரியை சேர்த்து பொடித்துக் கொள்ளவும்
- 6
அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து நைஸாக அரைக்கவும்
- 7
பாத்திரத்தில் அரைத்த தேங்காய் முந்திரி விழுது, பால் சேர்த்து குறைந்த தீயில் மெதுவாக கலந்து கொண்டே இருக்க வேண்டும் இடையில் விட்டால் கட்டி தட்டிவிடும். 15 நிமிடம் நன்றாக கலந்து கொண்டே இருக்கவும்.
- 8
15 நிமிடத்திற்கு பிறகு சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.பால் ரெடி
- 9
செய்து வைத்த பூரியை பாலில் நனைத்து பரிமாறும் தட்டில் வைக்கவும்
- 10
பூரியை இரண்டாக மடித்து தட்டில் வைத்து அதன் மேல் செய்து வைத்த பாலை ஊற்றவும்.
- 11
சுவையான பால் பூரி ரெடி
Similar Recipes
More Recipes
































கமெண்ட்